செம்மண் நிறைந்த மெக்சிகோ நாடு. அழகிய பெண்கள் நிறைந்த இந்த நாட்டின் மிக அழகான கிராமமாக லா பேட்ரோனாவை (La Patrona) சொல்லலாம். காரணம் அங்கிருக்கும் பெண்களின் மேனி அல்ல, அவர்கள் செய்யும் ஓர் உன்னத பணி...

பிப்ரவரி 14, 1995ஆம் ஆண்டு. காலை 10 மணி. பெர்னார்டாவும், ரோசாவும் தங்களுக்கான காலை உணவு ஒரு பாக்கெட் பிரெட் மற்றும் ஒரு லிட்டர் பாலோடு, அந்த ரயில் தண்டவாளத்தைக் கடக்க நின்று கொண்டிருக்கிறார்கள். பெர்னார்டா தண்டவாளத்தில் காது வைத்து, அந்த சத்தத்தைக் கேட்டு மகிழ்கிறாள். அவளின் விளையாட்டைக் கண்டித்து ரயில் நெருங்குவதை உணர்த்தி பின்னுக்கு இழுக்கிறாள் ரோசா. ஒதுங்கி நிற்கிறார்கள். வேகமாகக் கடக்கிறது அந்த சரக்கு ரயில். அதன் கூரைகளில், இண்டு இடுக்குகளில் எல்லாம் மனித கூட்டம் ஒட்டிக் கொண்டிருந்தது. இவர்களின் கையிலிருந்த உணவைப் பார்த்து "பசி".." மேடம் பசி..." என்று அலறியது பெருங்கூட்டம். ஒரு நொடி தான்... எதையும் யோசிக்காமல் தங்கள் கைகளிலிருந்த உணவை அவர்களை நோக்கித் தூக்கி எறிந்தார்கள். ரயில் கண்ணை விட்டு மறையும் வரை அதைப் பெற்றவரின் கைகள் இவர்களுக்கு நன்றி சொன்னபடியே இருந்தது. வீட்டிற்கு சென்று தங்கள் அம்மாவிடம் நடந்ததை பயந்த படியே சொன்னார்கள். ஆனால்...


    இதனை தொடர்ச்சியாக வாசிக்க/பார்க்க ‘Next' பட்டனை அழுத்துங்கள்

    Next »

YOUR REACTION?