மலேசியாவில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள் அரக்கர்களாக மாறி ஒருவரையொருவர் தாக்கி கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Negri Sembilan மாநிலத்தில் செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் சுமார் 31 மாணவர்கள் இதுபோன்று நடந்துகொள்கிறார்கள்.

ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தான் இந்த மாணவர்கள் அரக்கர்களாக மாறுகிறார்கள். அந்த தருணத்தில் ஒருவரையொருவர் கொடூரமாக தாக்கி கொள்வதால், இவர்களை தடுக்கும் அளவுக்கு சக்தி யாரிடமும் இல்லை என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த மாணவர்கள் அரக்கர்களாக மாறும் தருணத்தில் இவர்களது உடம்பில் சூப்பர் பவர் இருப்பதை உணரமுடிகிறது. மாணவர்கள் மட்டுமின்றி சில நேரங்களில் ஆசிரியர்களும் இதுபோன்று நடந்துகொள்கிறார்கள்.

வெறி பிடித்த உணர்வு ஏற்பட்ட உடன் தங்களின் உடலை கீறிக்கொள்வதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த உணர்வு வகுப்பு, தேர்வு, விளையாட்டு என்று அனைத்தையும் பாதிப்பதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதியில் சூனியக்காரி பெண்மணி ஒருவர் அடிக்கடி அந்த பள்ளியினை சுற்றி வலம் வந்ததாகவும், அந்த பெண்மணி ஏதேனும் சூனியம் செய்திருந்தால் இதுபோன்று நடக்க வாய்ப்புள்ளதாக அப்பகுதியினர் சந்தேகின்றனர்.

YOUR REACTION?