அதி அவசரங்களில் மூழ்கிய நம் காலைப் பொழுதுக்கு நாம் காவு கொடுத்தது… காலை உணவு! இன்றைக்கு பொறியியல் மாணவன், கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்மணி, கணவன்–குழந்தைகளை அதிகாலையில் எழுந்து கிளப்பிவிடும் இல்லத்தரசி… இவர்கள் எல்லோருமே தொலைத்தது காலை உணவை! 

இரவில் எட்டு மணி நேரம் அமில ஊறலில் இருக்கும் இரைப்பை, காலை உணவைத் தவிர்த்தால் அமிலத்தால் சிதையத் தொடங்கும். காலை உணவைச் சாப்பிட்டு, இரைப்பையை நிரப்பாவிட்டால், முதல் நாள் இரவில் இயல்பாக ஏறிய பித்தம் மெதுவாகத் தலைக்கு ஏறும். அது வயிற்றுப் புண், வயிற்று உப்புசம், தீவிரமான வயிற்றுவலி, வாந்தி, பசியின்மை, அதிக உயர் ரத்த அழுத்தம், மனஅழுத்தம் வரை பல நோய்களைக் கொண்டு வந்து சேர்க்கும். காலை 9 மணிக்குள் சாப்பிடாமல், 11 மணிக்குச் சாப்பிட்டால் ட்ரான்ஸ்பேட் கொழுப்பும் கலோரியும் எக்குத்தப்பாக எகிறும்; அடிவயிற்றில் படிந்து பெருகும். ஆக, எப்படியாவது காலை உணவைக் கண்டிப்பாகச் சாப்பிட்டுவிட வேண்டும் என்பதுதான் நியதி.

எப்படிச் சாப்பிடலாம்… என்னென்ன சாப்பிடலாம்… பார்ப்போம்! 


    இதனை தொடர்ச்சியாக வாசிக்க/பார்க்க ‘Next' பட்டனை அழுத்துங்கள்

    Next »

YOUR REACTION?